கொரோனா சூழல்: நாடு முழுவதும் உள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கொரோனா சூழல்:  நாடு முழுவதும் உள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 17 May 2021 2:24 PM GMT (Updated: 17 May 2021 2:24 PM GMT)

கொரோனா சூழலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள டாக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை உலக நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவில் நாளொன்றுக்கு 4 லட்சத்துக்கும் கூடுதலானோர் இந்த கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்றைய கொரோனா பாதிப்பு 3.11 லட்சம் என்ற அளவில் இருந்தது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது.

எனினும், பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா சூழலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் அடங்கிய குழுவினருடன் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து டாக்டர்கள் கலந்து கொண்டனர்.  கொரோனா காலகட்டத்தில் டாக்டர்கள் கற்றறிந்த விசயங்கள் மற்றும் ஆலோசனைகளை அவர் கேட்டு கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோருடன் தொடர்ந்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.


Next Story