கொரோனா பாதித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பினார்


கொரோனா பாதித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 17 May 2021 4:33 PM GMT (Updated: 17 May 2021 4:33 PM GMT)

கொரோனா பாதித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பியது அறிந்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு கடந்த 9ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.  இதனால், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அவர் கேட்டு கொண்டார்.  மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அவர்களை கேட்டு கொண்டார்.

அவர், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார்.

புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவர், அரசு அதிகாரிகளுடன் செல்போன் மூலம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர்களை தேர்வு செய்தல், இலாகாக்கள் ஒதுக்குதல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் செல்போன் மூலம் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டு உள்ளார்.

கொரோனா பாதித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பிய செய்தியை அறிந்த தொண்டர்கள் அவரது இல்லத்தின் முன் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story