தேசிய செய்திகள்

கேரள முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 20-ந்தேதி பதவி ஏற்கிறார் + "||" + Kerala Government's Swearing-In Thursday, "Restricted To 500 Invitees"

கேரள முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 20-ந்தேதி பதவி ஏற்கிறார்

கேரள முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 20-ந்தேதி பதவி ஏற்கிறார்
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.
திருவனந்தபுரம், 

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, மந்திரி சபை அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச்செயலாளர் விஜயராகவன், ‘முதல்-மந்திரியாக பினராயி விஜயன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார். அவருடன் 20 மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

புதிய மந்திரி சபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 இடங்கள் சுழற்சி முறையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு- பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு- பினராயி விஜயன் அறிவித்துள்ளது.
2. யோகாசனம் என்பது அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி முறை - பினராயி விஜயன்
யோகாசனம் என்பது அறிவியல்பூர்வமான உடற்பயிற்சி முறை. அதனை பயிற்சி செய்வோருக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி விவகாரம்: 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
5. தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் கேரள சட்டசபையில் 136 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு; பினராயி விஜயன், உம்மன்சாண்டியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்
தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் கேரள சட்டசபையில் 136 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-மந்திரி பினராயி விஜயன், உம்மன்சாண்டியும் பொறுப்பேற்றனர்.