கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என பெயர் கொண்ட அந்த சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு, ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி ஒரே நாளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தைப் பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பிரதமர் மோடி 9 மாநில ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய மரபணு மாற்ற வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்குகிறது இதனால் பெரும்பாலான பள்ளிகளை மூட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு அரிதாகவே ஏற்படுகிறது நோய்த் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு (ஏஇஎப்ஐ) தகவல் தெரிவித்துள்ளது.