நாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு கூடுதலானோருக்கு கொரோனா சிகிச்சை


நாட்டில் 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கு கூடுதலானோருக்கு கொரோனா சிகிச்சை
x
தினத்தந்தி 18 May 2021 11:58 AM GMT (Updated: 18 May 2021 11:58 AM GMT)

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்து சென்றுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் கூடுதலானோர் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 மாநிலங்களில், 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரையிலான கொரோனா நோயாளிகளும், 18 மாநிலங்களில், 50 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 3ந்தேதி குணமடைந்தோர் விகிதம் 81.7% என்ற அளவில் இருந்தது.  இந்த விகிதம் 85.6% ஆக அதிகரித்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இது நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகம் ஆகும் என தெரிவித்து உள்ளார்.


Next Story