நாடு முழுவதும் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் - இந்திய ரயில்வே அமைச்சகம்


நாடு முழுவதும் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் - இந்திய ரயில்வே அமைச்சகம்
x
தினத்தந்தி 18 May 2021 1:50 PM GMT (Updated: 18 May 2021 1:50 PM GMT)

நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

”நாடு முழுவதும் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான மருத்துவமனைகளில் ஏற்கெனவே 4 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 52 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது 30 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள 86 ரயில்வே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் 2,539-லிருந்து 6,972 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை 62-லிருந்து 296 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகள் 273-லிருந்து 573 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story