தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள்: உலக சுகாதார அமைப்பு வேதனை + "||" + World Is At Risk Of "Vaccine Apartheid", Says WHO Chief Tedros Adhanom Ghebreyesus

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள்: உலக சுகாதார அமைப்பு வேதனை

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள்: உலக சுகாதார அமைப்பு வேதனை
நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. உலக சுகாதார  அமைப்பின் டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது:- “உலக மக்கள் தொகையில் அதிக வருவாய் கொண்ட நாடுகள் 15% மக்கள் தொகையைத்தான் கொண்டுள்ளது. ஆனால் பணக்கார நாடுகள்  45% தடுப்பூசிகளை வைத்துள்ளனர்.

 குறைந்த மற்றும் குறைந்த-நடுத்தர வருவாய் நாடுகள் உலக மக்கள் தொகையில் பாதியைக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகள் உலக தடுப்பூசிகளில் 17% தடுப்பூசிகளை மட்டும்தான் வைத்துள்ளன. எனவே இடைவெளி மிகப்பெரியது.

124 நாடுகளுக்கு மொத்தம் 6 கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் 0.5% தடுப்பூசிகள்தான் அனுப்பப்பட்டுள்ளன. பணக்கார நாடுகள் தங்கள் நாட்டின் குழந்தைகள், மற்றும் பதின்ம வயதினருக்குக் கூட தடுப்பூசி செலுத்தத் தொடங்கி விட்டன. 

ஆனால்  பிறநாடுகளின் மருத்துவப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள். முதியவர்களுக்கு கூட இன்னும் தடுப்பூசிப் போடப்படாமல் இருக்கிறது இதுதான் வேறுபாடு, வேற்றுமை என்கிறேன். தடுப்பூசி  உற்பத்தியில் தொழில்நுட்ப பகிர்வு இல்லாததே மற்ற நாடுகள் பிற நாடுகளின் ஏற்றுமதியை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா? உலக சுகாதார அமைப்பு பரிசீலனை
பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் பல்வேறு தரவுகளுடன் விண்ணப்பித்துள்ளது.
2. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும்
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
3. இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. இந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகத்திற்கு குறைந்த அளவு தடுப்பூசியே ஒதுக்கீடு...! முழு விவரம்
இந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகம், அதன் மக்கள் தொகைக்கு தகுதியான தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பெறவில்லை.
5. டெல்டா வகை கொரோனா புதிய உச்சம்;உயிரிழப்பும் அதிகரிப்பு-உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
டெல்டா வகை கொரோனா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.