தேசிய செய்திகள்

குஜராத்தை புரட்டி போட்ட ‘டவ்தே’ புயல்: சேதப்பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி + "||" + PM Modi To Visit Gujarat, Diu Today To Review Cyclone Tauktae Damage

குஜராத்தை புரட்டி போட்ட ‘டவ்தே’ புயல்: சேதப்பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

குஜராத்தை புரட்டி போட்ட ‘டவ்தே’ புயல்: சேதப்பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி
குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் ‘டவ்தே’ புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.
ஆமதாபாத்,

குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த ‘டவ்தே’  புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு ஏழு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. 

மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். 

இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார். டெல்லியில் இருந்து, காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் செல்லும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிடுகிறார். மேலும் உனா, டையூ, ஜபராபாத், மஹூவா பகுதிகளையும் அவர் பார்வையிட உள்ளார். ஆமதாபாத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
2. மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
கொரோனா மேலாண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்
3. ‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை
‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
4. பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டி ஒட்டியதாக டெல்லியில் 17 பேர் கைது
பிரதமர் மோடி குறித்து அவதூறான சுவரொட்டி ஒட்டியதாக டெல்லியில் 17 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
5. டெல்லியில் பிரதமரை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக 12 பேர் கைது எனத்தகவல்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டியதற்காக 12 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.