தேசிய செய்திகள்

மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு + "||" + Maharashtra sees over 30,000 new Covid cases again after two days; Mumbai daily count at 1,350

மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,000-ஐ தாண்டி புதிதாக 1,350 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
மும்பை, 

மராட்டிய தலைநகர் மும்பையில் நேற்று முன்தினம் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இருந்தது. இந்தநிலையில் நேற்று புதிதாக 1,350 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரத்து 239 ஆக உயர்ந்து உள்ளது. 

இதில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 163 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 29 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நகரில் மேலும் 57 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 409 ஆக உயர்ந்து உள்ளது.

நகரில் தொற்று பாதித்தவர்களில் 93 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 369 நாட்களாக உள்ளது. நகாில் 78 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 284 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 24,950 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. மும்பை சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது; ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு
தொடர் மழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் மும்பை சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் 6 ஆயிரம் பயணிகள் நடுவழியில் சிக்கி தவிக்கின்றனர்.
3. மும்பையில் கடற்படை தளத்தை சுற்றி ட்ரோன் பறக்கவிட தடை
மும்பையில் கடற்படை தளத்தை சுற்றி 3 கி.மீ.க்கு ட்ரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. மும்பையில் பலத்த மழை: ரெயில் சேவை பாதிப்பு
மும்பை, தானே மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.
5. கொட்டித்தீர்த்த கனமழை; மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது
தொடச்சியாக பெய்த கனமழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது.