குழந்தைகள் -இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு... ஆய்வு நடத்த பிரதமர் அறிவுறுத்தல் + "||" + Collect, Assess Data On Children Infected With Covid, PM Tells Officials
குழந்தைகள் -இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு... ஆய்வு நடத்த பிரதமர் அறிவுறுத்தல்
கொரோனாவால் இளைஞர்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி
கொரோனாவால் இளைஞர்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிப்புத் தொடர்பான விவரங்களைச் சேகரித்துத் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மராட்டியம், கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றால் குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுவது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள், இளைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்த தரவுகளைச் சேகரித்து மதிப்பிட்டு தொடர்ச்சியான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார். கொரோனா தடுப்பு மருந்துகள் வீணாக்கப்படுவது குறித்துக் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, தடுப்பு மருந்துகளை வீணாக்காமல் பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காற்றோட்டம் நன்றாக இருந்தால், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயம் குறையும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.