தேசிய செய்திகள்

கேரளா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் உயிரிழப்பு + "||" + Young girl dies of black fungus in Kerala

கேரளா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் உயிரிழப்பு

கேரளா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் உயிரிழப்பு
கேரளா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. 

வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  கேரளா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் உயிரிழந்துள்ளார்.  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது பெண் பலியாகியுள்ளார்.  

கேரளாவில் இதுவரை 15 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே, கேரளாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்தவரின் கண் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட்டுள்ளது. 62 வயதான அப்துல் காதர் என்பவருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. எட்டிப்பார்க்கும் கருப்பு பூஞ்சை
“கோடை காலத்தில் கூரை வேய்ந்தால், மழை காலத்தில் தண்ணீர் ஒழுகுவதை தடுக்க முடியும்” என்று கிராமத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு.
2. கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
3. கருப்பு பூஞ்சை முழுமையாக குணப்படுத்தக்கூடியது தான், பீதி அடைய வேண்டாம் - ராதாகிருஷ்ணன் விளக்கம்
கருப்பு பூஞ்சை நோயானது முழுமையாக குணப்படுத்தக்கூடியது தான் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.