இந்தியாவில் கொரோனா பரிசோதனை- புதிய உச்சம் + "||" + 32,86,07,937 samples tested for #COVID19 up to 22nd May 2021. Of these, 21,23,782 samples were tested yesterday: Indian Council of Medical Research
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி மக்களை கதி கலங்க வைத்தது. எனினும், ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.
இதனிடையே, தொற்று பாதிப்பை கண்டறிய இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 20.66 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நேற்று 21.23 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனை எண்ணிக்கை இதுவேயாகும். நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 32 கோடியே 86 லட்சத்து 07 ஆயிரத்து 937- ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.