தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Lockdown has been extended till 31st May, 5am in Delhi: Delhi CM Arvind Kejriwal

டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
டெல்லியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைத்து வருகிறது. டெல்லியில்   கடந்த 24 மணி நேரத்தில் 1,600 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவிகிதமாக இருந்தது. தற்போது  தொற்று பாதிப்பு 2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

 டெல்லியில் கடந்த ஏப்ரல்  19 ஆம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், இன்று மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்தால் 31 ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார்.

தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதால் டெல்லியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக தெரிகிறது.   டெல்லியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுவதால் 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் இருக்கலாம் என்று தெரிகிறது.  


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? கெஜ்ரிவால் இன்று அறிவிக்க வாய்ப்பு
டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
2. உத்தர பிரதேசத்தில் மே 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
உத்தர பிரதேசத்தில் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
3. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று; இன்று 6,453 பேர் குணமடைந்தனர்
டெல்லியில் தற்போது 31,308 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஊரடங்கு நீட்டிப்பா? தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
ஊரடங்கை நீட்டித்து தீவிரப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
5. கர்நாடகத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.