தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 446 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: 12 பேர் பலி + "||" + Black fungus infects 446 people in Karnataka: 12 killed

கர்நாடகாவில் 446 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: 12 பேர் பலி

கர்நாடகாவில் 446 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு:  12 பேர் பலி
கர்நாடகாவில் 446 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்திய கருப்பு பூஞ்சை நோய்க்கு 12 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு,

நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.  இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.

பீகாரில் 117 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்ட சூழலில், இந்த நோயை பீகார் பேரிடர் மற்றும் பெருந்தொற்று சட்டத்தின் கீழ் ஒரு தொற்று நோயாக பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவில் இதுவரை 446 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  12 பேர் பலியாகி உள்ளனர்.

446 பேரில், 433 பேர் மருத்துவமனைகளிலும் மற்றும் 11 பேர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டும் உள்ளனர்.  வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இதுவரை மத்திய அரசிடம் இருந்து பெற்ற 1.05 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்பட 1.22 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, டாசிலிஜுமப் மருந்துடன் ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வருதல், வென்டிலேசனில் உள்ள நோயாளிகள் மற்றும் ஆக்சிஜனை துணைநிலையாக எடுத்து வருபவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட கூடும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் சரத் சந்திரா கூறியுள்ளார்.

இந்த காரணிகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 6 வாரத்திற்குள் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட கூடிய ஆபத்து அதிக அளவில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிலிண்டரில் இருந்து குளிர்ச்சியான ஆக்சிஜனை நேரடியாக கொடுப்பதும் ஆபத்து நிறைந்தது.  அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த, பூஞ்சை ஒழிப்புக்கான போசாகோனாஜோல் என்ற மருந்து கொடுக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் 31 பேர் பாதிப்பு
கொரோனாவால் 31 பேர் பாதிப்பு
2. யாஸ் புயல்: ஒடிசாவில் 75 லட்சம் பேர் பாதிப்பு; அரசு அதிகாரி தகவல்
ஒடிசாவில் யாஸ் புயலால் 10,644 கிராமங்களை சேர்ந்த 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.
3. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா
ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தி அறிவித்து உள்ளது.
4. இந்தியாவில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: மத்திய சுகாதார மந்திரி
இந்தியாவில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.
5. கருப்பு பூஞ்சை நோயால் தாசில்தார் பாதிப்பு
கருப்பு பூஞ்சை நோயால் கள்ளக்குறிச்சி குடிமை பொருள் தாசில்தார் பாதிக்கப்பட்டுள்ளார்.