தேசிய செய்திகள்

புதிய கொரோனா மருந்து அறிமுகம்; ஒரு டோஸ் விலை ரூ.59,750 + "||" + Introduction of new corona drug; The price of a single dose is Rs.59,750

புதிய கொரோனா மருந்து அறிமுகம்; ஒரு டோஸ் விலை ரூ.59,750

புதிய கொரோனா மருந்து அறிமுகம்; ஒரு டோஸ் விலை ரூ.59,750
பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோச் இந்தியா, கொரோனாவுக்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்து உள்ளது.

ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் என அழைக்கப்படும் இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து இந்த மருந்து நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மருந்தை பிரபல மருந்து நிறுவனமான சிப்லா நாடு முழுவதும் வினியோகம் செய்யும்.

இந்த மருந்து லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என கூறியுள்ள சிப்லா நிறுவனம், இதன் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் தேவை குறைவதாகவும், உயிரிழப்பு 70 சதவீதம் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.

2 டோஸ்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். அதில் ஒரு டோசின் விலை ரூ.59,750 ஆகும். இரு டோசும் இணைந்த பாக்கெட்டின் விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரும் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. முழு உடல் கவசம் அணிந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு ‘குளு, குளு’ கருவி; மும்பை மாணவர் கண்டுபிடிப்பு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் முழு உடல் கவசத்தை பயன்படுத்துவதால், கடுமையான வெப்பம், வியர்வையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
3. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியம்: ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
4. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை சீன ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம்; அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலம்
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை சீன ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம் அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.75 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.85 கோடியை தாண்டியுள்ளது.