மேற்கு வங்காள முன்னாள் முதல்- மந்திரி ஆஸ்பத்திரியில் அனுமதி


மேற்கு வங்காள முன்னாள் முதல்- மந்திரி ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 25 May 2021 7:26 PM GMT (Updated: 25 May 2021 7:26 PM GMT)

மேற்கு வங்காள முன்னாள் முதல்- மந்திரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்ஜி. 77 வயதான அவருக்கு கொரோனா தொற்று கடந்த வாரம் உறுதியானது. 

இந்த நிலையில் அவர், சிகிச்சைக்காக நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஆக்சிஜன் அளவு நேற்று காலையில் 90-க்கு கீழ் குறைந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது மனைவிக்கும் கடந்த வாரம் தொற்று உறுதியாகி சிகிச்சைபெற்று வந்தார். அவர் திங்கட்கிழமைதான் டிஸ்சார்ஜ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story