மாடர்னாவின் ஒற்றை டோஸ் தடுப்பூசி அடுத்த ஆண்டு இந்தியாவில் கிடைக்கும் என தகவல்


மாடர்னாவின் ஒற்றை டோஸ் தடுப்பூசி அடுத்த ஆண்டு இந்தியாவில் கிடைக்கும் என தகவல்
x
தினத்தந்தி 25 May 2021 8:51 PM GMT (Updated: 25 May 2021 8:51 PM GMT)

மாடர்னாவின் ஒற்றை டோஸ் தடுப்பூசி அடுத்த ஆண்டு இந்தியாவில் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக தொடரும் நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது போடப்பட்டு வருகின்றன. மூன்றாவது தடுப்பூசியாக ரஷியாவின் ஸ்புட்னிக் வி-க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, குறைந்த அளவில் போடப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள்தொகைக்கு இந்த தடுப்பூசிகளின் இருப்பு, உற்பத்தி போதாத நிலையில், சர்வதேச அளவில் பிற தடுப்பூசிகளை பெறுவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக அலசப்பட்டது.

அப்போது, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இந்த ஆண்டு இந்தியாவுக்கு வழங்குவதற்கு கூடுதல் தடுப்பூசிகள் இல்லை. அதேநேரம் அந்நிறுவனம் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசியை அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது. அது தொடர்பாக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் மாடர்னா பேசி வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

Next Story