தேசிய செய்திகள்

ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும்; மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே தகவல் + "||" + 60,000 drugs will be available to treat black fungus from June 1; Maharashtra Minister Rajesh Tope

ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும்; மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும்; மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும் என மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
2,245 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ள நிலையில், வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் புதிய அச்சுறுத்தலாக உருவாகி உள்ளது. இதில் மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் தோபே கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் பரவல் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 245 நோயாளிகள் உள்ளனர். இவர்கள் தவிர மகாத்மா ஜோதிராவ் புலே ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற 1,007 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டனர்.

60 ஆயிரம் மருந்து
கருப்பு பூஞ்சை நோய்க்கான முழு சிகிச்சை, மருந்தும் மகாத்மா ஜோதிராவ் ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரியிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆம்போடெரிசின்- பி மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் ஜூன் 1-ந் தேதி முதல் மாநில அரசுக்கு 60 ஆயிரம் மருந்துகள் கிடைக்கும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ள மருந்து போக, கூடுதலாக இது கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு
நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதியவர் பலியானார்.
2. மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பலி
மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. 7 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளானார்கள்; கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை அதிவேகமாக உயரவில்லை: மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மராட்டியத்தில் ஏராளமான உயிர்களை காவு வாங்கிய இந்த நோயின் பாதிப்பு சமீப நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.
4. அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தகவல்
அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.
5. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லையில் பெண் ஒருவர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.