கேரளாவில் பரவலாக மழை : 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை


File Photo (PTI)
x
File Photo (PTI)
தினத்தந்தி 26 May 2021 3:08 AM GMT (Updated: 26 May 2021 3:08 AM GMT)

யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவனந்தபுரம், 

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  யாஸ் என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். 

புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்புடைய மாநிலங்கள் எடுத்து வருகின்றன. 

இந்த நிலையில், யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோழிக்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமைக்குப் பிறகு மழையின் தீவிரம் குறையத்தொடங்கியும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story