மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களிடம் 1.77 கோடி தடுப்பூசி கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 May 2021 4:17 AM GMT (Updated: 26 May 2021 4:17 AM GMT)

மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களிடம் 1.77 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 21.89 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி இதில் 19 கோடியே 93 லட்சத்து 39 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

இந்த நிலையில் மாநிலங்களிடமும், யூனியன்பிரதேசங்களிடமும் தற்போது 1 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்து 850 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகளை அடுத்த 3 நாளில் வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

Next Story