‘யாஸ்’ புயல் காரணமாக மும்பையில் இருந்து புவனேஷ்வர், கொல்கத்தா இடையே விமான சேவை ரத்து


‘யாஸ்’ புயல் காரணமாக மும்பையில் இருந்து புவனேஷ்வர், கொல்கத்தா இடையே விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 26 May 2021 7:55 PM GMT (Updated: 26 May 2021 7:55 PM GMT)

மும்பையில் இருந்து புவனேஷ்வர், கொல்கத்தா இடையே இயக்கப்படும் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

வங்களா விரிகுடா கடலில் உருவான ‘யாஸ்’ புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் இடையே நேற்று கரையை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. மேலும் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

இந்த நிலையில் சிவில் விமான இயக்குனரகம் விடுத்துள்ள அறிக்கையில், யாஸ் புயல் காரணமாக மும்பையில் இருந்து ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா ஆகிய 2 நகரங்கள் இடையே இயக்கப்படும் 6 விமான சேவைகள் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்ற பகுதிகளுக்கு விமானங்கள் கால அட்டவணைபடி தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story