தேசிய செய்திகள்

மாநில அரசுகளிடம் 1¾ கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் + "||" + State government vaccine stock 1.75 crore ; Central Government Information

மாநில அரசுகளிடம் 1¾ கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்

மாநில அரசுகளிடம் 1¾ கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்
மாநில அரசுகளிடம் இன்னும் 1¾ கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மேலும் 1 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
தடுப்பூசி கொள்முதல்
தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.இவ்வாறு மாநிலங்கள் பெறப்படும் தடுப்பூசி மற்றும் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரங்களை நேற்று வெளியிட்டு இருந்தது.

1.77 கோடி டோஸ்கள்
அதன்படி மத்திய அரசு வழங்கியவை மற்றும் மாநிலங்கள் கொள்முதல் செய்தவையாக மொத்தம் 22 கோடியே 59 ஆயிரத்து 880 டோஸ் தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுவரை பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.இதில் வீணானவை உள்பட மொத்தம் 20 கோடியே 13 லட்சத்து 74 ஆயிரத்து 636 டோஸ்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 1 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 594 டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.இதைத்தவிர அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் 1 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சகம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

அசோக் கெலாட் குற்றச்சாட்டு
அதேநேரம் மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் மீது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.தடுப்பூசி இல்லாததால் நாடு முழுவதும் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருநாளில் தீர்ந்து விடும்
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், மாநிலங்களிடம் 1 கோடி தடுப்பூசி இருப்பதாக ஹர்சவர்தன் கூறியுள்ளார். ஆனால் அனைத்து மாநிலங்களும் அதை பயன்படுத்தினால் வெறும் ஒரு நாளில் அனைத்து டோஸ்களும் தீர்ந்து விடும். ஏப்ரல் 2-ந்தேதி 42 லட்சம் டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு இருந்தன. தற்போது வெறும் 16 லட்சம் டோஸ்களே போடப்படுகின்றன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய மந்திரியின் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன - மத்திய அரசு
ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை முழுதுமாக திரும்பிய பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறி உள்ளது.
2. புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. மத்திய அரசுக்கான நிலுவைத்தொகை; தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், 1999-ல் கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.
4. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மியான்மர் நாட்டினருக்கு வேலையா? மத்திய அரசு விளக்கம்
மியான்மர் நாட்டவர்களுக்கு அப்படி வேலைவாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா 3-வது அலை குறித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: மத்திய அரசு
கொரோனா 3-வது அலை பற்றிய கணிப்புகளை வானிலை முன் அறிவிப்பு போல சாதாரணமாக மக்கள் எடுத்துக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.