2024ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சீன பாதிப்பு இருக்கும்: பா.ஜ.க. குற்றச்சாட்டு


2024ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சீன பாதிப்பு இருக்கும்:  பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 May 2021 3:28 AM GMT (Updated: 27 May 2021 3:28 AM GMT)

அமெரிக்காவை போன்று வருகிற 2024ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சீன பாதிப்பு இருக்கும் என பா.ஜ.க. பொது செயலாளர் கூறியுள்ளார்.

இந்தூர்,

பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை வீழ்த்தியதில் சீனா முக்கிய பங்கு வகித்தது என பத்திரிகைகளில் வெளியான செய்தியை படித்தேன்.

டிரம்புடன் வேற்றுமை கொண்டிருந்த சீனா, அவருக்கு எதிராக செயல்பட்டதுபோன்று, எல்லை மோதலை தொடர்ந்து மோடிக்கு எதிராகவும் செயல்படும் என கூறியுள்ளார்.

இதன்படி, வருகிற 2024ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சீனா பாதிப்பு ஏற்படுத்தும் என சந்தேகிக்கப்படுகிறது.  இவை எல்லாவற்றையும் நான் கூறவில்லை.  உலகம் முழுவதும் இதுபற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் கிழக்கு லடாக் எல்லையில் நடந்த மோதலில், சீன படையினரை அதன் எல்லை பகுதிக்கு திரும்பி போக செய்தவர் பிரதமர் மோடி.  அதனால் பிரதமர் மோடியின் இருப்பு பற்றி சீனா நன்றாக உணர்ந்திருக்கும்.  அதனாலேயே இந்திய தேர்தலில் சீனா தலையிடும் சாத்தியம் அதிகம் உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story