தேசிய செய்திகள்

மேற்குவங்காளத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு + "||" + West Bengal Govt extends statewide restrictions till June 15th

மேற்குவங்காளத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

மேற்குவங்காளத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
மேற்குவங்காளத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் அம்மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மேற்குவங்காள அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, மேற்குவங்காளத்தில் ஜூன் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர எஞ்சிய கடைகள் அனைத்தும் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மேற்குவங்காள அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா: ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம்
ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. ஊரடங்கு தளர்வுகள் அமல் - லடாக்கில் குவியும் சுற்றுலா பயணிகள்
லடாக்கில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
4. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள் - முழு விவரம்
தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.