தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன் + "||" + Kerala Government Announces Special Package, Monthly Aid For Children Orphaned Due To COVID

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று 24 ஆயிரத்து 166 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 539 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா தாக்குதலுக்கு இன்று 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

கேரளாவில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் உடனடி நிவாரணமாகவும், அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாகவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பட்டம் பெறும் வரை அவர்களது கல்விச் செலவுகளை அரசே ஏற்று கொள்ளும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு- பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு- பினராயி விஜயன் அறிவித்துள்ளது.
2. யோகாசனம் என்பது அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி முறை - பினராயி விஜயன்
யோகாசனம் என்பது அறிவியல்பூர்வமான உடற்பயிற்சி முறை. அதனை பயிற்சி செய்வோருக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி விவகாரம்: 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் கேரள சட்டசபையில் 136 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு; பினராயி விஜயன், உம்மன்சாண்டியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்
தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் கேரள சட்டசபையில் 136 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-மந்திரி பினராயி விஜயன், உம்மன்சாண்டியும் பொறுப்பேற்றனர்.
5. கேரள முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 20-ந்தேதி பதவி ஏற்கிறார்
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.