தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மே.வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி + "||" + West Bengal Chief Minister Mamata Banerjee will meet Prime Minister Modi at Kalaikunda Air Force Station

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மே.வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மே.வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
கலைகுன்டா விமானப்படை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.
கொல்கத்தா, 

வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நேற்று முன்தினம் காலையில், ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது, ஒடிசா மாநிலத்திலும், மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், புயல் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார்.

முதலில் ஒடிசாவுக்கு செல்லும் அவர், தலைநகர் புவனேஸ்வரில் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பாத்ரக், பாலசோர், புர்பா மெதினிபூர் ஆகிய மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிடுகிறார்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி மேற்கு வங்காளத்துக்கு செல்கிறார். கலைகுன்டா விமானப்படை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது யாஸ் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து இருவரும் விவாதிக்கக் கூடும் எனத்தெரிகிறது.  பின்னர் இருவரும் தனித்தனியே யாஸ் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.  


தொடர்புடைய செய்திகள்

1. மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி
பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும் சில பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. யாஸ் புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி அரசு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
3. 'இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார்’ என்று முதலையின் புகைப்படத்துடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா?
'இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார்’ என்று முதலையின் புகைப்படத்துடன் அமெரிக்காவின் பிரபல செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் இதழில் செய்தி வெளியானதாக சமூகவலைதளத்தில் புகைப்படம் பரவியது.
4. பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டம்: “மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார்” - அதிகாரிகள் பதிலடி
பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்பது தொடர்பாக மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5. குஜராத்தை புரட்டி போட்ட ‘டவ்தே’ புயல்: சேதப்பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி
குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் ‘டவ்தே’ புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை