கொரோனா பரவல்; கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு


கொரோனா பரவல்; கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 28 May 2021 7:23 PM GMT (Updated: 28 May 2021 7:23 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள காங்கிரஸ் (மணி) தலைவர் ஜோஸ் கே.மணி, நாடாளுமன்ற மேலவை எம்.பி. பதவியை கடந்த ஜனவரி 11-ந்தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவி காலம் ஜூலை 2024 வரை உள்ளது. எனவே இந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சட்டவிதிகளின்படி காலியாக உள்ள இடங்களுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் கொரோனா 2-வது அலை கேரளாவிலும் உச்சநிலையில் இருப்பதால், இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

“கொரோனா சூழலில் மேம்பாடு அடையும் முன்பு தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல” என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இருந்தாலும் எந்த தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றி எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

Next Story