இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு


இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 29 May 2021 4:03 AM GMT (Updated: 29 May 2021 4:03 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.73- லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீறு கொண்டு பரவி வந்தது. தினசரி பரவல் 4 லட்சத்தைத் தாண்டிச் சென்றது. ஆனால் தொடர் ஊரடங்கு பொதுமுடக்கம், கடுமையான கட்டுப்பாடுகளை பல மாநிலங்கள் பின்பற்றி வருகிற நிலையில் தொற்று பரவலும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த  24 மணி நேரத்தில் 1.73-லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 28 ஆயிரத்து 724- ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை முந்தைய நாளைவிட  1.14 லட்சம் குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 601- ஆக உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 90.80 சதவிகிதமாக உள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 9.84 சதவிகிதமாகவும் தினசரி பாதிப்பு விகிதம் 8.36-சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. தொடர்ந்து 5 நாளாக தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. 

Next Story