மும்பையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை


மும்பையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை
x
தினத்தந்தி 29 May 2021 5:55 AM GMT (Updated: 29 May 2021 5:55 AM GMT)

மராட்டியத்தின் மும்பை நகரில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மும்பை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலைக்கேற்ப, நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் என்ற அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.  ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.100.17 ஆக விற்பனை செய்யப்பட்டது.

ராஜஸ்தானின் பல்வேறு நகரங்களிலும் பெட்ரோல் விலை அதிகரித்து காணப்படுகிறது.  மராட்டியத்தின் தானே நகரிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது.

எனினும், தலைநகர் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.99.94 என்ற முந்தின நாள் விலையிலேயே நேற்றும் விற்பனை செய்யப்பட்டது.  இதேபோன்று டீசல் விலையிலும் மாற்றமின்றி ரூ.91.87 ஆக நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மராட்டியத்தின் மும்பை நகரில் பெட்ரோல் விலை இன்று ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.19 ஆகவும், டீசல் விலை ரூ.92.17 ஆகவும் விற்பனையாகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.94 ஆகவும், டீசல் விலை ரூ.84.89 ஆகவும் விற்பனையாகிறது.  கொல்கத்தா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.97 ஆகவும், டீசல் விலை ரூ.87.74 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டர் ஒன்றுக்கு ரூ.95.51 மற்றும் ரூ.89.65 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


Next Story