மாநில அரசுகளுக்கு 22.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை


மாநில அரசுகளுக்கு 22.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 29 May 2021 5:57 AM GMT (Updated: 29 May 2021 5:57 AM GMT)

நாடு முழுவதும் இதுவரை 20.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 22.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 20  கோடியே 80 லட்சத்து 09 ஆயிரத்து 397- டோஸ் தடுப்பூசிகளை மாநில அரசுகள் பயன்படுத்தியுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது. 

மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களிடம் 1.82 கோடி டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும்  அடுத்த 3 தினங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  4 லட்சத்திற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story