டெல்லியில் ஊரடங்கு தளர்வாக தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட பணிகளுக்கு அனுமதி


டெல்லியில் ஊரடங்கு தளர்வாக தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட பணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 29 May 2021 11:11 AM GMT (Updated: 29 May 2021 11:11 AM GMT)

டெல்லியில் முதற்கட்ட ஊரடங்கு தளர்வாக தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட பணிகளுக்கு வரும் 31-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த மாதம் 20ஆம் தேதி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 29 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீவிரமான, தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், அங்கு கரோனா பாசிட்டிவ் 1.5 சதவீதத்துக்கும் கீழாகச் சரிந்தது. தினசரி பாதிப்பு 1,100 ஆகச் சரிந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 900-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார். 

இதையடுத்து டெல்லியில் அன்-லாக், அதாவது ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் பணியை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

டெல்லியில் முதற்கட்ட ஊரடங்கு தளர்வாக தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட பணிகளுக்கு வரும் 31-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக டெல்லியை நோக்கி வருகிறார்கள்.

Next Story