தேசிய செய்திகள்

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 5,613 பேருக்கு கொரோனா + "||" + Corona to 5613 people in Assam in the last 24 hours

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 5,613 பேருக்கு கொரோனா

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 5,613 பேருக்கு கொரோனா
அசாம் மாநிலத்தில் தற்போது 54,948 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 5,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,623 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,245 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 3,905 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,44,083 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 54,948 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மேலும் 1,182-பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 1,182- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.95 கோடியாக உயர்ந்துள்ளது.
3. அசாம் உடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி -மிசோரம் கவர்னர் தகவல்
அசாம்-மிசோரம் எல்லை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது.
5. அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி தீர்வுக்கு மத்திய அரசு முயற்சி
அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி தீர்வுக்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.