தேசிய செய்திகள்

காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு + "||" + Terrorist firing on civilians in Kashmir: One killed

காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு:  ஒருவர் உயிரிழப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 2 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
அனந்த்நாக்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பீஜ்பெஹேரா என்ற பகுதியில் இரண்டு பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில், ஷாநவாஸ் அகமது பட் மற்றும் சஞ்சீத் அகமது பார்ரே ஆகிய இருவர் காயமடைந்தனர்.  அவர்களில் சஞ்சீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.  ஷாநவாசை ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து காஷ்மீர் போலீசார் அந்த பகுதியில் தேடுதல் முகாமிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. தான்சானியாவில் துப்பாக்கி சூடு; 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
தான்சானியாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
3. நைஜீரியாவில் ஆயுத தாக்குதலில் 22 பேர் பலி; 14 பேர் காயம்
நைஜீரியாவின் மத்திய பகுதியில் நடந்த ஆயுத தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
4. முககவசம் அணியாமல் வந்த ரெயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி
வாக்கு வாதம் முற்றிய நிலையில், வங்கி காவலாளி திடீரென ரெயில்வே ஊழியரை கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார்.
5. அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.