தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது: ராகுல் காந்தி காட்டம் + "||" + Can't Fight Covid With "Meaningless" Talk: Rahul Gandhi On "Mann Ki Baat"

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது: ராகுல் காந்தி காட்டம்

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது: ராகுல் காந்தி காட்டம்
பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு  கொரோனா தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி துவக்கம்  முதலே விமர்சித்து வருகிறார். அவ்வப்போது தனது டுவிட்டர் மூலம் தனது விமர்சனங்களை முன் வைத்து வரும் ராகுல் காந்தி, இன்று பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையை மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-  கொரோனாவுக்கு எதிராக போராட சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவை தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற  வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது” என்று பதிவிட்டுள்ளார்.  

மோடி பிரதமராக பதவியேற்றது முதல், அதாவது கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். மன் கி பாத் என்ற பெயரில் வெளியாகும் இந்த நிகழ்ச்சி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகிறது. நடப்பு மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணி ஆல் இந்தியா ரேடியாவில் ஒலிபரப்பானது.  பிரதமர் மோடியின் 77-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. யாஸ் புயல் பாதிப்பு; ஒடிசா முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2. பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மே.வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
கலைகுன்டா விமானப்படை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.
3. மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி
பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும் சில பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. யாஸ் புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி அரசு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
5. 'இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார்’ என்று முதலையின் புகைப்படத்துடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா?
'இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார்’ என்று முதலையின் புகைப்படத்துடன் அமெரிக்காவின் பிரபல செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் இதழில் செய்தி வெளியானதாக சமூகவலைதளத்தில் புகைப்படம் பரவியது.