தேசிய செய்திகள்

135 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதே பிரதமர் மோடியின் நோக்கம் - அமித்ஷா + "||" + NarendraModi has always made it clear that his aim as well as the government’s purpose is to serve 135 crore Indians Amit Shah

135 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதே பிரதமர் மோடியின் நோக்கம் - அமித்ஷா

135 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதே பிரதமர் மோடியின் நோக்கம் - அமித்ஷா
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய பாஜக அரசு 7 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வளர்ச்சி, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் ஈடுஇணையற்ற ஒருங்கிணைப்பின் தனித்துவமான உதாரணத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்கி உள்ளது. 

இந்த 7 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைளால், நாட்டின் நலன்தான் மிக முக்கியம் என ஒரு புறமும், மறுபுறம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். அதற்காக, நாட்டு மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். 

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் அனைத்து சவால்களையும் வெல்வோம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடைகள் இன்றி தொடர்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.  135 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதே பிரதமர் மோடியின் நோக்கம். என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக வடகிழக்கு பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது - அமித்ஷா
பாஜக வடகிழக்கு பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது - அமித்ஷா
2. கூட்டுறவு அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்: அமித்ஷா
அனைத்து கூட்டுறவு அமைப்புகளையும் அதிக அதிகாரம் கொண்டவையாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, தன்னை சந்தித்த கூட்டுறவுத்துறை தலைவர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.
3. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் - உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சந்தித்தார்.
4. அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார் - அமித்ஷா புகழாரம்
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5. அமித்ஷாவுடன் மேற்கு வங்காள கவர்னர் சந்திப்பு
3 நாட்களில் 2-வது முறையாக அமித்ஷாவை, மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேரில் சந்தித்தார்.