தேசிய செய்திகள்

பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் நமச்சிவாயம், செல்வம் சந்திப்பு + "||" + Namasivayam, wealth meeting with BJP national leader Natta

பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் நமச்சிவாயம், செல்வம் சந்திப்பு

பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் நமச்சிவாயம், செல்வம் சந்திப்பு
பாஜக தேசிய தலைவர் நட்டாவை, புதுச்சேரி பாஜக சட்டசபை தலைவர் நமச்சிவாயம், செல்வம் எம்.எல்.ஏ., சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக ரங்கசாமி பதவியேற்றார். கூட்டணி பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்., மற்றும் பாஜக கட்சிக்கு அமைச்சர் பதவி, சபாநாயகர் உள்ளிட்ட பதவிகள் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாஜக சட்டசபை கட்சி தலைவர் நமச்சிவாயம், மாநில பொதுச் செயலாளர் செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர், நேற்று டெல்லி சென்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

புதுச்சேரியில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்த மக்களின் நிலை குறித்தும் நட்டா கேட்டறிந்தார். கொரோனா பாதித்த மக்களுக்கு, பாஜக சார்பில் உதவிகள் செய்ய கேட்டு கொண்டார். 

தேர்தல்முடிவு வெளியாகி 24 நாட்கள் கழித்து எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர். ஆனால், இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. என்.ஆர்.காங்., - பாஜக இடையே அமைச்சர் பதவி ஒதுக்கீடு இழுப்பறியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.