தேசிய செய்திகள்

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது + "||" + Kangana Ranaut's bodyguard arrested on charges of cheating a woman on pretext of marriage

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலராக இருப்பவர் குமார் ஹெக்டே.

இவருடைய சொந்த ஊா் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளி ஆகும். இந்த நிலையில் குமார் ஹெக்டே, மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் அவர், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி குமார் ஹெக்டேவை வற்புறுத்தி உள்ளார். ஆனால் குமார் ஹெக்டே திருமணத்துக்கு மறுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண், மும்பை போலீசில் குமார் ஹெக்டே மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த குமார் ஹெக்டே, தனது சொந்த ஊரான மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளிக்கு வந்து தலைமறைவாக இருந்துள்ளார். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் மும்பை போலீசார் குமார் ஹெக்டேவை தேடி வந்தனர்.

இந்த நிலையில், குமார் ஹெக்டே சொந்த ஊரில் தலைமறைவாக இருப்பது மும்பை போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன்படி, மும்பை போலீசார் நேற்று முன்தினம் மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளி கிராமத்துக்கு வந்து அங்கு பதுங்கி இருந்த குமார் ஹெக்டேவை கைது செய்தனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது; மும்பை போலீசார் நடவடிக்கை
திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலரை அவருடைய சொந்த ஊரான மண்டியாவில் வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.
2. கிரிமினல் வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடிய நடிகை கங்கனா ரணாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மராட்டிய மாநில அரசுக்கு எதிரான கருத்துகளை கூறினார். மேலும், டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவு செய்தார்.
3. தேசத்துரோக வழக்கு: நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை தூண்டவில்லை; ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை துண்டவில்லை என்று தேசத்துரோக வழக்கு விசாரணையின் போது அவரது வக்கீல் வாதிட்டார்.
4. தேசத்துரோக வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்தை விசாரிக்க இடைக்கால தடை; போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நடிகை கங்கனாவை போலீசார் விசாரணைக்கு அழைக்க மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
5. தேசத்துரோக வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்திடம் போலீசார் விசாரணை
தேசத்துரோக வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.