தேசிய செய்திகள்

அசாமில் இன்று 5,690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Assam today 5690 people have recovered from corona

அசாமில் இன்று 5,690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

அசாமில் இன்று 5,690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
அசாம் மாநிலத்தில் தற்போது 52,448 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 3,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,06,868 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 55 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 5,690 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,49,773 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 52,448 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று; இந்திய அளவில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு; 2.76 லட்சம் பேர் குணம் அடைந்தனர்
நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 2.76 லட்சம் பேர் ஒரே நாளில் குணம் அடைந்தனர்.
2. அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.
3. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும்: மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
4. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 5,613 பேருக்கு கொரோனா
அசாம் மாநிலத்தில் தற்போது 54,948 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் புதிதாக 9,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 50.53 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை