தேசிய செய்திகள்

பா.ஜ.க. கமிஷன் பெற ‘தடுப்பூசிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடப்படுகின்றன’; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு + "||" + Covid Vaccines Being Diverted to Private Hospitals for BJP MLAs to Earn Huge Commission: AAP MLA Atishi

பா.ஜ.க. கமிஷன் பெற ‘தடுப்பூசிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடப்படுகின்றன’; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பா.ஜ.க. கமிஷன் பெற ‘தடுப்பூசிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடப்படுகின்றன’; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பா.ஜ.க. கமிஷன் பெற தடுப்பூசிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்,“தடுப்பூசிகளை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு திருப்பி விடுவதின்மூலம் பா.ஜ.க. பெரும் கமிஷன் பெறுகிறது. இதற்கான ஆதாரம், கர்நாடகத்தில் இருந்து வெளிவந்திருக்கிறது. இதில் பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா மற்றும் எம்.எல்.ஏ., ரவி சுப்ரமணியாவுக்கு தொடர்பு இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார். எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு அதிக அளவில் கமிஷன் கொடுக்க வேண்டியதிருப்பதால்தான் தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறியதை தொலைபேசி அழைப்பு பதிவுகள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா எம்.பி.யும், அவரது உறவினரான ரவி சுப்ரமணியா எம்.எல்.ஏ.வும் தடுப்பூசிகள்மூலம் பணம் சம்பாதிக்கின்றனர், அவர்கள் மீது வழக்கு போட வேண்டும், அவர்களது எம்.பி., எம்.எல்.ஏ., பதவிகளை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் குற்றம்சாட்டிய நிலையில் ஆம் ஆத்மி கட்சி இப்போது குற்றம் சாட்டி உள்ளது.

பா.ஜ.க. மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் டெல்லி செய்தி தொடர்பாளர் பிரவிண் சங்கர் கபூர் கூறுகையில், “தடுப்பூசி சற்று மெதுவாக வருவதில் சந்தேகம் இல்லை. ஆனால், பாரத் பயோடெக் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் ஆகிய இரண்டும் அடுத்த 10-15 நாட்களில் வினியோகம் இயல்பாகி விடும் என கூறி உள்ளன. உற்பத்தியாளர்கள் இப்படி உறுதி அளித்துள்ளபோதும் அதிஷி போன்ற ஆம் ஆத்மி தலைவர்கள் ஒவ்வொரு நாளும் எதற்காக தடுப்பூசி பற்றாக்குறை பற்றியும், வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டியது குறித்தும் எதற்காக பதிவு செய்த அறிக்கையை வெளியிட்டு விளையாடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
2. தட்டுப்பாட்டை போக்க புனேவில் இருந்து விமானத்தில் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், புனேவில் இருந்து 5½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.
3. மாநில அரசுகளிடம் 1¾ கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்
மாநில அரசுகளிடம் இன்னும் 1¾ கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மேலும் 1 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
4. மும்பை, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 2¾ லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
மும்பை மற்றும் ஐதராபாத்தில் இருந்து 2¾ லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
5. இந்தியாவில் 6.5 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகின்றன; மத்திய அரசு தகவல்
‘நாடு முழுவதும் தற்போது வரை 3.51 கோடி டோஸ்கள் போடப்பட்டு விட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.