தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார் + "||" + Metro rail test run in Mumbai; Maharashtra CM Uddhav Thackeray initiates

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்
தகிசர்- ஆரேகாலனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரெயில் திட்டம்
மும்பையில் தகிசர்- ஆரேகாலனி (மெட்ரோ 2ஏ), தகானுகர்வாடி - ஆரேகாலனி (மெட்ரோ -7) ஆகிய மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் அக்டோபர் மாதம் முடிவடையும் என மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்து உள்ளது. இதேபோல அனைத்து பணிகளும் முடிந்து இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.

சோதனை ஓட்டம்
இதற்கிடையே இந்த 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. தலைமை அதிகாரி ஆர்.ஏ. ராஜூவ் கூறினார். இந்தநிலையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி இன்று வைக்கிறார். இந்த நிகழ்ச்சி அகுர்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடக்கிறது. மும்பையில் தற்போது காட்கோபர்- அந்தேரி- வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டியது மராட்டியத்தின் பொன்னான தருணம்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டியது மராட்டியத்தின் பொன்னான தருணம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
2. மராட்டியத்தில் 18 மாவட்டங்களில் முழு தளர்வுகளா? மந்திரி விஜய் வடேடிவார் அறிவிப்பை மறுத்தார், உத்தவ் தாக்கரே
18 மாவட்டங்களில் முழுமையான தளர்வுகள் செய்யப்பட்டதாக மந்திரி விஜய் வடேடிவார் வெளியிட்ட அறிவிப்பை, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறுத்து விட்டார்.
3. மராட்டியத்தில் வரும் ஜூன் 1 முதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.
4. தொற்று பாதிப்பு குறைகிறது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? உத்தவ் தாக்கரே விளக்கம்
மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.
5. கொரோனாவுக்கு எதிரான போரில் நோயாளிகளின் குடும்ப டாக்டர்களும் இணைய வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
கொரோனாவுக்கு எதிரான போரில் நோயாளிகளின் குடும்ப டாக்டர்களும் இணைய வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்து உள்ளார்.