விமானப்படை அதிகாரியாக தேர்வான கர்நாடக இளம்பெண் - மந்திரி சுரேஷ் குமார் நேரில் பாராட்டு


விமானப்படை அதிகாரியாக தேர்வான கர்நாடக இளம்பெண் - மந்திரி சுரேஷ் குமார் நேரில் பாராட்டு
x
தினத்தந்தி 31 May 2021 12:02 AM GMT (Updated: 31 May 2021 12:02 AM GMT)

விமானப்படை அதிகாரியாக தேர்வான கர்நாடக இளம்பெண் ஆஷ்ரிதாவை மந்திரி சுரேஷ் குமார் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் தெற்கு படாவனே பகுதியில் வசித்து வருபவர் ஆஷ்ரிதா ஒலெட்டி. விமானவியல் என்ஜினீயரான இவர் இந்திய விமானப்படையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விமானங்களை பரிசோதிக்கும் அதிகாரியாக தேர்வாகி உள்ளார். இந்திய விமானப்படையில் இந்த பிரிவுக்கு தேர்வான முதல் பெண் இவர் தான். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

அதேபோல் சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியான சுரேஷ் குமாரும், ஆஷ்ரிதா ஒலெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘விமானப்படையில் தேர்வாகி உள்ள ஆஷ்ரிதா ஒலெட்டி கர்நாடகத்திற்கு மட்டுமல்ல நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனை மகத்துவமானது. ஆஷ்ரிதா ஒலெட்டியால் சாம்ராஜ்நகர் மாவட்டம் பெருமை அடைந்துள்ளது’’ என்று கூறினார்.

Next Story