அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தகவல்


அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தகவல்
x
தினத்தந்தி 31 May 2021 12:46 AM GMT (Updated: 31 May 2021 12:46 AM GMT)

அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.

சண்டிகார், 

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. நோயாளியின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அரியானாவில் இதுவரை 758 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 58 பேர் குணமடைந்து விட்டனர். 50 பேர் பலியானார்கள். மீதி 650 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஊசி மருந்தில் 6 ஆயிரம் குப்பிகள், மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் 2 ஆயிரம் குப்பிகள் கிடைக்கும். இதுதவிர, 5 ஆயிரம் குப்பிகளை கொள்முதல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story