மருத்துவமனை ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கபட்டாரா ..செய்தியின் உண்மை என்ன..?


மருத்துவமனை ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கபட்டாரா ..செய்தியின் உண்மை என்ன..?
x
தினத்தந்தி 31 May 2021 7:28 AM GMT (Updated: 31 May 2021 8:40 AM GMT)

சில நாட்களாக கொரோனா நோயாளிகள் உடல்கள் கிடைக்காததால் விரக்தியடைந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளியானது அதுகுறித்த உண்மை தகவல்கள் வருமாறு:-

ஐதராபாத்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 

கொரோனாவால் மக்கள் உயிரைக் காக்க அரசுகள் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் தெலுங்கானாவில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த படுபாதக செயல் பலரையும் பதறவைத்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக கொரோனாவால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில் உடல்கள்  ஏதும் கிடைக்காமல் விரக்தியடைந்த  தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு செல்லும் ஆக்சிஜன் சப்ளையை துண்டித்துள்ளார்.

இதனை சரியான நேரத்தில் அங்கு வார்டு பாயாக வேலைப்பார்த்த இளைஞர் ஒருவர் கவனித்து கூச்சலிட்டதோடு, இந்த விபரீத செயலில் ஈடுபட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ஓட்டுநரை கைது செய்த போலீசார், அங்கேயே அவரை நன்கு கவனித்தனர். இதற்கிடையே இதில் தொடர்புடைய மேலும் இரண்டு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களையும் போலீசார் தேடி வருகின்றனர் என தகவல்கள் வெளியானது.அதுகுறித்த விடியோவும் ஒரு நபர் அடிவாங்குவது போல் வெளியானது 

ஆனால் அது உண்மை அல்ல என்று சரிபார்ப்பு தகவல்கள் கூறுகிறது.

மராட்டியத்தில்  பாஜக இளைஞர் தலைவர் ஒருவரை போலீசார் தாக்கிய அந்த வீடியோ ஆம்புலனஸ் டிரைவர் எப வைரலாகியுள்ளது.

இந்த  வீடியோவுக்கு உரிய சம்பவம் ஏப்ரல் 9 ம் தேதி மராட்டிய மாநிலம்  ஜல்னா தீபக் மருத்துவமனையில் நடந்துள்ளது. வீடியோவில், பாஜக இளைஞர் செயலாளர் சிவ்ராஜ் நரியால்வாலேவை தடியால் போலீசார் அடிப்பதைக் காணலாம். 

இதுகுறித்து அவர் கூறியதாவது

“நான் சில தனிப்பட்ட வேலைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். எனக்கு தெரிந்தவர் அங்கு அனுமதிக்கப்ட்டு உள்ளார் என்பதை நான் அறிந்தேன். நான் அந்த நபரைப் பார்க்கச் சென்றேன், இருப்பினும், அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவரைப் பார்க்க இன்னும் பலர் கூடியிருந்தனர்,

போலீசார் அங்கு வந்தனர்  ​​எனக்குத் தெரிந்த ஒருவரைச் சுற்றி போலீசார் இருப்பதைக் கண்டேன். நான் அருகில் சென்றேன், அவர்கள் எங்கள் சமூக மக்களை துஷ்பிரயோகம் செய்வதைக் கேட்க முடிந்தது. நான் விரைவில் அதன் வீடியோ எடுக்க  தொடங்கினேன். இதை தொடர்ந்து அவர்கள் என்னை தடியால் தக்க தொடங்கினார்களென  நரியால்வாலே கூறினார். 

இந்த் சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்ப்ட்டு உள்ளார்கள்.

மேலும்  இதுகுறித்த  வீடியோ வெளியாகி உள்ளது :-



Next Story