புதிய விதிகளை டுவிட்டர் பின்பற்ற வேண்டும்: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்


புதிய விதிகளை டுவிட்டர் பின்பற்ற வேண்டும்: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 May 2021 12:09 PM GMT (Updated: 31 May 2021 12:09 PM GMT)

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது.

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது.  சமூக வலைத்தள  நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் அதில் இடம் பெற்று இருந்தன.  3 மாதங்களுக்குள் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. 

மத்திய அரசின் புதிய விதிகள் குறித்து பரவலாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கூகுள், பேஸ்புக்,  வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு இணங்கி செயல்பட சம்மதம் தெரிவித்தன. ஆனால் டுவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்ற மறுத்து தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில், வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர், டுவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்றாதது குறித்து டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. அப்போது டெல்லி ஐகோர்ட் கூறுகையில், டுவிட்டர் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் தடை விதிக்கலாம் என தெரிவித்தார். இந்த மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

முன்னதாக வழக்கு விசாரணையின் போது, டுவிட்டர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மத்திய அரசின் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்பதாகவும் விசாரணை அதிகாரியை நியமித்துள்ளதாகவும் கூறினார். ஆனால், இதனை மத்திய அரசின் வழக்கறிஞர் மறுத்தார். 


Next Story