தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 12,300 பேருக்கு கொரோனா + "||" + Kerala's TPR drops to 13.77% after recording 12,300 new COVID-19 cases from 89,345 samples

கேரளாவில் மேலும் 12,300 பேருக்கு கொரோனா

கேரளாவில் மேலும் 12,300 பேருக்கு கொரோனா
கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,06,982 ஆக உள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,300-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “மாநிலத்தில் புதிதாக 12,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 89,345 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 13.77 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 174- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 8,815 ஆக உயர்ந்துள்ளது.

 கொரோனாவில் இருந்து மேலும் 28,867- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,10,385 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில்  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  2,06,982  ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 29245 ஆக உயர்வு
2. புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. 11 மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு: தமிழகத்தில் 1,908 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலுக்குப் பின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டுதல் வழங்கியபின்னர், 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.