தேசிய செய்திகள்

நீண்ட நேர ஆன்லைன் வகுப்பு; பிரதமரிடம் புகார் அளித்த 6 வயது சிறுமி + "||" + 'Watching this on loop': 6-year-old Kashmiri girl's question for 'Modi saab' is the cutest video

நீண்ட நேர ஆன்லைன் வகுப்பு; பிரதமரிடம் புகார் அளித்த 6 வயது சிறுமி

நீண்ட நேர ஆன்லைன் வகுப்பு; பிரதமரிடம் புகார் அளித்த 6 வயது சிறுமி
உலகெங்கிலும் உள்ள மக்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளை ஆசிரியர்கள் எடுப்பதாக காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு புகார் அளித்த ீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன் பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?” என அந்த சிறுமி பேசியிருந்தார்.

தற்போது டுவிட்டரில் இந்த வீடியோவை பல ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். பல ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு
கிணற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
2. கிணற்றில் தவறி விழுந்த மாணவனின் கதி என்ன?
கிணற்றில் தவறி விழுந்த மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். அவருடைய நிலை என்ன? என்பது தெரியவில்லை.
3. நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4. மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் சாவு
மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார்.
5. பெருந்துறையில் தூக்குப்போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை தேர்வில் தேர்ச்சி பெறாததால் விபரீத முடிவு
தேர்வில் தேர்ச்சி பெறாததால் பெருந்துறையில் தூக்குப்போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.