கொரோனா தடுப்பூசி விவகாரம்: 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்


கொரோனா தடுப்பூசி விவகாரம்: 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
x
தினத்தந்தி 31 May 2021 2:29 PM GMT (Updated: 31 May 2021 2:29 PM GMT)

தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க  மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பினராயி விஜயன், தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

மேலும், தடுப்பூசி கொள்முதல் சுமை முழுவதுமாக அல்லது கணிசமாக மாநிலங்களின் மீது கூட விழுந்தால், அவர்களின் நிதி நிலைமை கடுமையான நெருக்கடியில் இருக்கும். மாநிலங்களின் நிதி வலிமை என்பது  ஒரு ஆரோக்கியமான கூட்டாட்சி அமைப்புக்கு  இன்றியமையாத அங்கமாகும்.

 மாநிலங்களின் நிதியில் சிக்கல் ஏற்பட்டால் கூட்டாட்சியும் பலவீனம் அடையும்.  நம்மை போன்ற ஜனநாயக அரசியலுக்கு இது உகந்ததாக இருக்காது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு இது  தடையாகவும்  இருக்கும்” என தனது கடிதத்தில் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். 


Next Story