தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது + "||" + 15,077 Covid Cases In A Day In Maharashtra; Mumbai Restrictions Eased

மராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது

மராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது
மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 16.39 சதவிகிதமாக உள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்தநிலையில் மே மாதம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.  

கடந்த 24 மணி நேரத்தில் 15,077- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 184 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து 33 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில்  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,53,367- ஆக சரிந்துள்ளது. 

மராட்டியத்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு இன்று குறைவாக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 16.39- சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.66-சதவிகிதமாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 93 சதவிகிதமாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

2. மராட்டியத்தில் மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 6,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 251- ஆக உயர்வு
மராட்டியத்தில் கனமழை தொடர்பான சம்பங்களில் சிக்கி 251- பேர் உயிரிழந்தனர்.
5. மராட்டியத்தில் கனமழையால் கடும் பாதிப்பு
மராட்டியத்தில் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 84 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.