40 வருடங்களில் இல்லாத அளவு கடும் வீழ்ச்சி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.3 % ஆக சரிவு


40 வருடங்களில் இல்லாத அளவு  கடும் வீழ்ச்சி:  நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.3 % ஆக சரிவு
x
தினத்தந்தி 31 May 2021 3:22 PM GMT (Updated: 31 May 2021 3:22 PM GMT)

ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் ஜிடிபி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -7.3 சதவிகிதமாக சரிந்துள்ளது. எனினும் நான்காவது காலாண்டில் 1.6 சதவீதம் ஏற்றம் பெற்றது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.  

ஜூலை 2020-ல் ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்கத் தொடங்கியதில் இருந்து பொருளாதாரம் மெல்ல ஏற்றம் பெறத்தொடங்கியுள்ளது. 

2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அனைத்து விதமான பொருளாதார நடவடிக்கைகள் வழக்கம் போல செயல் படத்தொடங்கினாலும் 1.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் நிதி நிலை கடந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது தெரிகிறது. 

Next Story