கருப்பு பூஞ்சை மருந்து கூடுதலாக ஒதுக்கீடு... மத்திய மந்திரி சதானந்த கவுடா தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 May 2021 10:03 PM GMT (Updated: 31 May 2021 10:03 PM GMT)

மாநிலங்களுக்கு கருப்பு பூஞ்சை மருந்து கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க அம்போடெரிசின்-பி என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து அடங்கிய மேலும் 30 ஆயிரத்து 100 குப்பிகள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா தெரிவித்தார். 

இதில், கர்நாடகாவுக்கு மட்டும் 1,930 மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆம்போடெரிசின் - பி மருந்தை அந்தந்த மாநிலங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. 

இதில் தமிழகத்திற்கு கூடுதலாக 680 ஆம்போடெரிசின் - பி குப்பிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மராட்டிய மாநிலத்திற்கு 5 ஆயிரத்து 900 மற்றும் குஜராத் மாநிலத்திற்கு 5 ஆயிரத்து 630 குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 80 ஆயிரம் ஆம்போடெரிசின் - பி மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story